ஜோசப் ஸ்டாலின் கைது

இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இலங்கை ஆசிரியர் சங்க தலைமை அலுவலகத்தில் தங்கியிருந்த அவரை கொள்ளுப்பிட்டி பொலிஸார் கைது செய்துள்ளனர்.

கடந்த மே மாதம் 28ஆம் திகதி நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக போராட்டம் நடத்திய சம்பவம் தொடர்பில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.