ஞாயிறு, திங்கள் மதுபானசாலைகள் மூடல்

நாட்டிலுள்ள அனைத்து மதுபான சாலைகளும் நாளைமறுதினம் (மே 15) ஞாயிற்றுகிழமை மற்றும் மறுநாள் (மே 16) திங்கட்கிழமை மூடப்படவேண்டும் என்று மதுவரித் திணைக்களம் அறிவித்துள்ளது.

வரும் திங்கட்கிழமை இடம்பெறும் வெசாக் பண்டிகையை முன்னிட்டு இவ்வாறு உத்தரவிடப்பட்டுள்ளது என்று திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.