டீசலின் விலை மாத்திரம் லீற்றருக்கு 10 ரூபாய் குறைப்பு

ஓட்டோ டீசல் ஒரு லீற்றரின் விலை 10 ரூபாயினால் குறைக்கப்பட்டுள்ளதாக பெற்றோலிய கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது.

இந்த புதிய விலை மாற்றம் இன்று இரவு 10 மணிக்கு நடைமுறைக்கு வருகிறது.

பெற்றொல் உள்ளிட்ட ஏனைய எரிபொருள்களின் விலையில் மாற்றம் இல்லை என்று கூட்டுத்தாபனம் குறிப்பிட்டுள்ளது.