டெஸ்ட் வரலாற்றில் ஒரே இன்னிங்ஸில் 10 விக்கெட்டுக்களை வீழ்த்திய மூன்றாவது வீரரானார் நியூசிலாந்து வீரர் அஜாஸ் படேல்

நியூசிலாந்தின் சுழல் பந்துவீச்சாளர் அஜாஸ் படேல் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் ஒரு இன்னிங்சில் 10 விக்கெட்டுகளை வீழ்த்திய மூன்றாவது பந்துவீச்சாளர் என்ற பெருமையைப் பெற்றார்.

மும்பையில் நடைபெறும் இந்தியாவுக்கு எதிரான தொடரின் இரண்டாவது டெஸ்டின் முதல் இன்னிங்ஸில் இடது கை சுழற்பந்து வீச்சாளர் அஜாஸ் படேல் இந்த சாதனையை நிகழ்த்தினார்.

ஒரு டெஸ்ட் இன்னிங்ஸில் 10 விக்கெட்டுகளை வீழ்த்திய மூன்றாவது பந்துவீச்சாளராக இங்கிலாந்தின் ஜிம் லேக்கர் மற்றும் இந்தியாவின் அனில் கும்ப்ளே ஆகியோருடன் படேல் இணைந்தார்.

மும்பை டெஸ்டின் முதல் இன்னிங்ஸில்ல படேல் 47.5 ஓவர்கள் வீசினார். பத்து விக்கெட்டுகளுக்கு 119 ஓட்டங்களை விட்டுக்கொடுத்தார்.

இந்தியாவின் அனில் கும்ப்ளே கடைசியாக 10 விக்கெட்டுகளை வீழ்த்தினார். 1999ல் பாகிஸ்தானுக்கு எதிராக டெல்லியில் நடந்த டெஸ்டில் அவர் இந்த சாதனையை நிகழ்த்தினார்.