டோக்கியோ ஒலிம்பிக்கில் தங்கப் பதக்கப் பட்டியலில் அமெரிக்கா சீனாவை முந்தியது

2020 டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளில் முதல் நாளிலிருந்து அமெரிக்கா மற்றும் சீனா இடையே பதக்கப் பட்டியலில் சூடான போர் நிலவியது. ஒலிம்பிக் பதக்கப் பட்டியலில் சீனாவை பின்னுக்குத் தள்ளி அமெரிக்கா முன்னிலை வகிக்கிறது.

அமெரிக்கா 39 தங்கப் பதக்கங்களையும், சீனா 38 பதக்கங்களையும் வென்றுள்ளது.
இன்று டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளின் கடைசி நாளாகும். பல நிகழ்வுகளின் இறுதிப் போட்டிகள் தொடங்கியுள்ளன.

- Advertisement -

இம்முறை 19 நாள்களில் நூற்றுக்கணக்கான போட்டிகளில் 600-க்கும் மேற்பட்ட விளையாட்டு வீர, வீராங்கனைகள் பங்கேற்றனர். அமெரிக்கா அணி, 2020 ஒலிம்பிக்கின் இறுதி மணிநேரத்தில் தொடர்ச்சியான மூன்றாவது விளையாட்டுக்களில் தங்கப் பதக்கம் வென்று பதக்க அட்டவணையில் முதலிடம் பிடித்தது.

மகளிர் கூடைப்பந்து இறுதிப்போட்டியில் அமெரிக்கா, ஜப்பானை வென்றது, அமெரிக்க சைக்கிள் வீரர் ஜெனிபர் வலென்டே தனது பந்தயத்தில் தங்கம் வென்று அமெரிக்க நிலையை உயர்த்தினார்.

பின்னர், அமெரிக்க மகளிர் கைப்பந்து முதல் முறையாக ஒலிம்பிக் பட்டத்தை வென்று தங்கப் பதக்க அட்டவணையில் நாட்டினை முதலிடத்துக்கு உயர்த்தியது.

27 தங்கம், 14 வெள்ளி மற்றும் 17 வெண்கலப் பதக்கங்களை வென்ற இந்த ஆண்டு ஒலிம்பிக் போட்டிகளில் பதக்கப்பட்டியலில் ஜப்பான் மூன்றாவது இடத்தில் உள்ளது. கிரேட் பிரிட்டன் 22 தங்கப் பதக்கங்களை வென்று பதக்கப் பட்டியலில் நான்காவது இடத்தில் உள்ளது.

நேற்றைய ஆண்கள் ஈட்டி எறிதலில் தங்கப் பதக்கத்துடன் அண்டை நாடான இந்தியா பதக்க அட்டவணையில் 48 வது இடத்திற்கு முன்னேறியது.

இந்த ஆண்டு ஒலிம்பிக் போட்டிகளில் இந்தியர்கள் ஒரு தங்கம், இரண்டு வெள்ளி மற்றும் நான்கு வெண்கலப் பதக்கங்களை வென்றனர். இது ஒலிம்பிக் வரலாற்றில் இந்தியாவின் மிக உயர்ந்த செயல்திறன் என்று கருதப்படுகிறது.

- Advertisement -
- Advertisement -

Must Read

- Advertisement -

Related News

- Advertisement -
error: Alert: Content is protected !!