தங்கத்தின் விலை இன்றும் 6 ஆயிரம் ரூபாயினால் உயர்வு; பற்றாக்குறையே காரணம்

யாழ்ப்பாணத்தில் தங்கத்தின் விலை இன்று திங்கட்கிழமை மேலும் 6 ஆயிரம் ரூபாயினால் அதிகரித்துள்ளது.

இதன்மூலம் 24 கரட் தூய தங்கத்தின் இன்றைய விலை ஒரு லட்சத்து 27 ஆயிரம் ரூபாயை எட்டியுள்ளது.

- Advertisement -

நாட்டில் தங்கத்தின் கையிருப்பு பற்றாக்குறை காரணமாக கொழும்பு தங்க இறக்குமதியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

கடந்த ஆண்டு உலகம் முழுவதும் ஏற்பட்ட கோரோனா வைரஸ் பரவலால் சர்வதேச பங்குச் சந்தையில் நிலையற்ற தன்மை காணப்படுகிறது. அத்தோடு உலகப் பொருளாதாரம் சரிவைச் சந்தித்து வருகிறது. இதனால் முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீடான தங்கத்தில் முதலீடு செய்கின்றனர்.

தங்கத்தின் தேவை அதிகரித்து வருவதால் உலக சந்தையில் தங்கத்தின் விலையில் நிலையற்ற தன்மை காணப்படுகிறது.

ஆபரணத் தங்கத்தின் விலை

யாழ்ப்பாணத்தில் இன்று (ஜூலை 05) ஒரு பவுண் 22 கரட் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு லட்சத்து 16 ஆயிரத்து 500 ரூபாயாக அதிகரித்துள்ளது. நேற்றுமுன்தினம் அதன் விலை ஒரு லட்சத்து 10 ஆயிரத்து 900 ரூபாயாகக் காணப்பட்டது.

தூய தங்கத்தின் விலை

24 கரட் தூய தங்கத்தின் விலை ஒரு லட்சத்து 27 ஆயிரம் ரூபாயாக உயர்ந்துள்ளது.

- Advertisement -
- Advertisement -

Must Read

- Advertisement -

Related News

- Advertisement -
error: Alert: Content is protected !!