தங்கத்தின் விலை 120,000 ரூபாயாகக் குறைவு

யாழ்ப்பாணத்தில் தங்கத்தின் விலை இன்று புதன்கிழமை ஒரு லட்சத்து 20 ஆயி்ரம் ரூபாயாகக் குறைவடைந்துள்ளது.

கடந்த ஆண்டு உலகம் முழுவதும் ஏற்பட்ட கோரோனா வைரஸ் பரவலால் சர்வதேச பங்குச் சந்தையில் நிலையற்ற தன்மை காணப்படுகிறது. அத்தோடு உலகப் பொருளாதாரம் சரிவைச் சந்தித்து வருகிறது. இதனால் முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீடான தங்கத்தில் முதலீடு செய்கின்றனர்.

- Advertisement -

தங்கத்தின் தேவை அதிகரித்து வருவதால் உலக சந்தையில் தங்கத்தின் விலையில் நிலையற்ற தன்மை காணப்படுகிறது.

ஆபரணத் தங்கத்தின் விலை

யாழ்ப்பாணத்தில் இன்று (ஜூலை 07) ஒரு பவுண் 22 கரட் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு லட்சத்து 10 ஆயிரம் ரூபாயாகக் குறைவடைந்துள்ளது. நேற்று அதன் விலை ஒரு லட்சத்து 14 ஆயிரத்து 600 ரூபாயாகக் காணப்பட்டது.

தூய தங்கத்தின் விலை

24 கரட் தூய தங்கத்தின் விலை ஒரு லட்சத்து 20 ஆயிரம் ரூபாயாகக் குறைவடைந்துள்ளது.

- Advertisement -
- Advertisement -

Must Read

- Advertisement -

Related News

- Advertisement -
error: Alert: Content is protected !!