தனியார் துறையில் பணியாற்ற வசதியாக அரச ஊழியர்களுக்கு விடுமுறை – ஆராய குழு நியமனம்

நாட்டிற்குள் தனியார் துறை வேலைவாய்ப்பை தொடர்வதற்காக அரச ஊழியர்களுக்கு ஐந்து ஆண்டுகள் விடுமுறை வழங்குவது தொடர்பில் ஆராய ஏழு பேர் கொண்ட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.

பொதுநிர்வாகம் மற்றும் முகாமைத்துவ அமைச்சு அதன் ஆரம்ப அறிக்கையை இரண்டு வாரங்களுக்குள் அமைச்சரவையில் சமர்ப்பிக்குமாறு குழுவிற்கு அறிவித்துள்ளது.