Friday, September 22, 2023
Homeஅரசியல்தபால்மூல வாக்களிப்புக்கான ஆரம்ப பணிகள் நிறைவு

தபால்மூல வாக்களிப்புக்கான ஆரம்ப பணிகள் நிறைவு

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால்மூல வாக்களிப்பை நடத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் நிறைவு செய்யப்பட்டுள்ளதாக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

தபால்மூல வாக்களிப்பு நடைமுறைக்கு ஆணைக்குழு சிறப்பு அறிவுறுத்தல்களை வெளியிட்டுள்ளது.

இதேவேளை, தபால் மூல வாக்களிப்பு எதிர்வரும் பெப்ரவரி 22, 23 மற்றும் 24 ஆம் திகதிகளில் இடம்பெறவுள்ளது.

தகுதியுடைய அனைத்து விண்ணப்பதாரர்களும் தத்தமது பணியிடங்களில் தங்களின் தபால் வாக்குகளை மூன்று நாட்களில் வாக்களிக்க முடியும் என்று தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஶ்ரீ ரத்நாயக்க தெரிவித்தார்.

அந்த மூன்று நாட்களிலும் யாரேனும் தபால் வாக்கு போட முடியாமல் போனால், இம்மாதம் 28ம் திகதி, மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர்கள் முன்னிலையில் தபால் வாக்காளர்கள் தங்களது வாக்கை பதிவு செய்யலாம் என்று அவர் குறிப்பிட்டார்.

சுமார் 36,000 தபால் மூல வாக்களிப்பு விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளதாகவும் ஆணையாளர் நாயகம் உறுதிப்படுத்தினார்.

இதேவேளை, உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வாக்குச் சீட்டு விநியோகம் எதிர்வரும் 19ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular