Wednesday, March 22, 2023
Homeஅரசியல்தபால்மூல வாக்குச்சீட்டு விநியோகம் தடைப்பட்டமை தொடர்பில் சிறப்பு அறிவிப்பு

தபால்மூல வாக்குச்சீட்டு விநியோகம் தடைப்பட்டமை தொடர்பில் சிறப்பு அறிவிப்பு

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால்மூல வாக்குச் சீட்டுகளை விநியோகிப்பது தொடர்பாக தேசிய தேர்தல் ஆணைக்குழு சிறப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

இன்று ஆயிரத்து 116 மையங்களுக்கு தபால் வாக்குச் சீட்டுகளை விநியோகிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்ததாக தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

எனினும், தவிர்க்க முடியாத காரணங்களால், தேர்தல் ஆணைக்குழுவின் கட்டுப்பாட்டை மீறி, திட்டமிட்டபடி வாக்குச் சீட்டுகள் வழங்கப்பட மாட்டாது என்று அவர் குறிப்பிட்டார்.

முன்னதாக திட்டமிட்டபடி தேர்தல் ஆணைக்குழுவினால் வாக்குச் சீட்டுகளை பெற்றுக்கொள்ள முடியவில்லை என்று தேர்தல் ஆணையாளர் சுட்டிக்காட்டினார்.

வாக்குச் சீட்டுகளை விநியோ புதிய திகதி குறித்த நேரத்தில் அறிவிக்கப்படும் என்றும் தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular