பருத்தித்துறை பொலிஸ் பிரிவில் வன்முறை மற்றும் குற்றங்களில் ஈடுபடும் கும்பலைச் சேர்ந்த ஒருவரை பொலிஸார் துப்பாக்கிச்சூடு நடத்தி கைது செய்தனர்.
படுகாயமடைந்த சந்தேக நபர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார்.
பருத்தித்துறை அல்வாய் பகுதியில் இன்று இந்த சம்பவம் இடம்பெற்றது.
பல்வேறு வாள்வெட்டு வன்முறைகள் மற்றும் திருட்டு – கொள்ளை சம்பவங்களுடன் தொடர்புடைய அவரை பொலிஸார் கைது செய்ய முற்பட்ட போது, பொலிஸார் மீது தாக்குதல் நடத்தி விட்டு தப்பிச் செல்ல முற்பட்டார்.
பொலிஸார் அவர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினர். காயமடைந்து தரையில் சாய்ந்த அவரை பொலிஸார் கைது செய்தனர் என்று தெரிவிக்கப்பட்டது.