தமிழகம் – யாழ்ப்பாணம் இடையேயான பயணிகள் கப்பல் சேவை நாளை ஆரம்பமாவிருந்த நிலையில் திடீரென பிற்போடப்பட்டுள்ளது.
தமிழகம் நாகப்பட்டினம் – யாழ்ப்பாணம் காங்கேசன்துறை இடையிலான செரியாபாணி என்ற பெயரைக் கொண்ட பயணிகள் கப்பல் சேவை நாளை(10) ஆரம்பமாகவிருந்த நிலையில் தொழிநுட்ப ரீதியான தடங்கல்கள் காரணமாக எதிர்வரும் 12ஆம் திகதிக்கு பிற்போடப்பட்டுள்ளது.
செரியாபாணி கப்பலின் பரீட்சார்த்த நடவடிக்கைகள் நேற்றைய தினம் இடம்பெற்றிருந்தது. எனினும் தொழிநுட்ப ரீதியான தடங்கல்கள் காரணமாக சேவைகள் இடைநிறுத்தப்படுவதாக இன்று மாலை அறிவிக்கப்பட்டுள்ளது.