தமிழ்பேசும் மக்களின் நலனுக்காய் அணிதிரண்டு வாக்களியுங்கள் – முதல்வனின் அன்பான வேண்டுதல்

அன்பார்ந்த தமிழ்பேசும் மக்களே!

நாட்டின் 9ஆவது நாடாளுமன்றத்தைத் தெரிவு செய்யும் பொதுத் தேர்தல் நாடுமுழுவதும் நாளை நடைபெறுகின்றது.

- Advertisement -

மொத்தம் 225 நாடாளுமன்ற உறுப்பினர்களை தேர்வு செய்வதற்கான இந்தத் தேர்தலில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளை சேர்ந்த 3 ஆயிரத்து 682 பேரும், சுயேட்சைகள் 3 ஆயிரத்து 800 பேரும் என மொத்தம் 7 ஆயிரத்து 452 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். ஒரு கோடியே 62 லட்சத்து 63 ஆயிரத்து 874 பேர் இந்த தேர்தலில் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்.

கோரோனா பரவல் காரணமாக வாக்களிப்பு நிலையங்களில் பல்வேறு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. வாக்களிப்பு நிலையங்களுக்கு உள்ளே நுழையும் போதும், வெளியேறும் போதும் கை சுத்தம் செய்வது கட்டாயம் என அறிவிக்கப்பட்டு அதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. தனி மனித இடைவெளியை கடைபிடித்து, முககவசம் அணிந்து வர வேண்டும் எனவும் வாக்காளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. வாக்குப்பதிவு நாளை மாலை 5 மணிக்கு நிறைவடைந்ததும் வாக்கு எண்ணும் நிலையங்களுக்கு வாக்குப்பெட்டிகள் எடுத்துச் செல்லப்படும். அங்கு நாளை இரவு பாதுகாப்பாக வைக்கப்படும். வாக்குகள் எண்ணிக்கை நாளைமறு நாள் காலை 7 மணி முதல் ஆரம்பமாகிய முடிவுகள் நண்பகல் முதல் வெளியாகும் என தெரிகிறது.
வடக்கு – கிழக்கு தமிழர் தாயகத்தில் இம்முறை பல கட்சிகள், சுயேட்சைகள் போட்டியிடுவதனால் வாக்குகள் சிதறும் நிலை காணப்படுகிறது.

தமிழர் தேசத்தை உள்ளன்புடன் நேசிக்கும் ஒருவரைத் தேர்ந்தெடுங்கள். நேர்மையும், திறமையும், ஊழலை வெறுப்பவராகவும், மக்களை நேசிப்பவராகவும் இருக்க வேண்டும் என்பதே அவரிடம் இருக்க வேண்டிய தகைமைகள்.

தமிழர் தாயகத்திலிருந்து ஒரு கட்சியை வெளியேற்றுவதற்கு பல லட்சம் ரூபாய் பேரம் ஊடகங்களிடம் பேசப்பட்டன. எனினும் அந்த பேரத்திலிருந்து முதல்வன் விலகி மக்கள் ஊடகமாகவே என்றும் செயற்பட விரும்புகின்றான்.

கட்சி ஒன்றின் சின்னம் பொறிக்கப்பட்ட ஸ்ரிக்கர்களை ஒட்டிய பொருள்களை ஒளிப்படம் எடுத்து அவை மக்களுக்கு இலவசமாக வழங்கப்பட்டன என்று செய்தி வெளியிட்டால் பல மில்லியன் ரூபாயை வழங்கவும் பெரும் தலைகள் முன்வந்தன. ஆலயத்தில் வேற்று மத வேட்பாளரின் சுவரொட்டியை ஒட்டிவிட்டு செய்தி வெளியிட்டால் இவ்வாறு லட்சம் ரூபாய் பணம் என்றும் பேரம் பேசப்பட்டது. அவை அனைத்தையும் நிராகரித்து முதல்வன் கடந்து வந்துள்ளான்.

எந்தக் கட்சி மீதும் வேட்பாளர் மீதும் சேறு பூசும் பணியை முதல்வன் முன்னெடுக்கவில்லை.

கட்சிகள், வேட்பாளர்களைத் தீர்மானிப்பது மக்களாகும். கட்சிகள், வேட்பாளர்களின் நிலைப்பாடுகளை வெளிப்படுத்துவதே ஊடகங்களின் பொறுப்பாகும். அந்த வகையில் அந்தப் பணியை முதல்வன் செய்துள்ளான். தமிழ் தேசிய பாதையில் இயங்கும் கட்சிகளின், வேட்பாளர்களின் நிலைப்பாடுகளை முதல்வன் கடந்த நாள்களில் வெளிப்படுத்தியிருந்தான்.

எனவே தமக்கான வேட்பாளர்களைத் தெரிந்தெடுத்து வாக்காளர்கள் சுயமாக சிந்தித்து வாக்களிக்க வேண்டும் என்று முதல்வன் கோரி நிற்கின்றான்.

தமிழ் பேசும் மக்களின் நலனுக்காய், வடக்குக் கிழக்கு மாகாணத்திலுள்ள தமிழ்பேசும் மக்கள் அனைவரும், நாளை அணிதிரண்டு சென்று வாக்களித்து ஜனநாயகக் கடமையினை நிறைவேற்ற முன்வாருங்கள்.

  • ஆசிரியர் –
- Advertisement -
- Advertisement -

Must Read

- Advertisement -

Related News

- Advertisement -
error: Alert: Content is protected !!