தமிழ்மொழியில் தண்டப்பணம் அறவீடு பற்றுச்சீட்டு வழங்க யாழ்ப்பாணம் பிரதான தபாலகம் மறுப்பு; அரை மணிநேரம் போராடி வென்றார் இளைஞன்

யாழ்ப்பாணம் பிரதான தபால் நிலையத்தில் பற்று சீட்டை தமிழ் எழுதி தர கூறி இளைஞர் ஒருவர் சுமார் 30 நிமிடங்கள் காத்திருந்து , தமிழ் எழுதி வாங்கி சென்று இருந்தார்.
யாழ்ப்பாணம் பிரதான தபாலகத்தில் நேற்று புதன்கிழமை இந்தச் சம்பவம் இடம்பெற்றது.

போக்குவரத்து குற்றம் ஒன்றுக்காக பொலிஸாரினால் தண்டம் விதிக்கப்பட்ட நிலையில் அதற்கான குற்ற பணத்தினை சாரதி யாழ்ப்பாணம் பிரதான தபாலகத்தில் செலுத்தியுள்ளார். அதன் போது தபாலக உத்தியோகத்தர் பற்று சீட்டை ஆங்கிலத்தில் எழுத முற்பட்ட போது , அந்த சாரதியான இளைஞன் தனக்கு தமிழ் மொழியில் பற்று சீட்டை எழுதி தாருங்கள் என கேட்டுள்ளார்.

அதன் போது உத்தியோகத்தர் , நாம் ஆங்கிலத்தில் எழுதி கொடுப்பதே வழமை ஆங்கிலத்தில்தான் எழுதி தருவோம் என கூறியுள்ளார். அதற்கு அந்த இளைஞன் உங்களின் தாய் மொழி தமிழ்தானே அதே போன்றுதான் என் தாய் மொழியும் தமிழ். எனவே நீங்கள் தமிழில் எழுதி தாருங்கள் எனக் கோரியுள்ளார்.

அதற்கு அந்த உத்தியோகத்தர் அவ்வாறு எழுதி தர முடியாது என்று கூறிய போதும் , தனக்கு தமிழ் மொழியில் எழுதி தந்தால் மாத்திரமே பற்றுசீட்டை வாங்குவேன் என கூறி நின்ற போது , மிரட்டும் தொனியில் தமது கடமைக்கு இடையூறு விளைவிக்கின்றீர் என பொலிஸில் முறையிடுவோம் என்று தபாலக உத்தியோகத்தர்கள் கூறியுள்ளனர்.

அதற்கும் இளைஞன் அஞ்சாது , தனக்கு தமிழ் மொழியில் எழுதி பற்று சீட்டு தர வேண்டும் என தபாலகத்தில் உள்ள இருக்கையில் அமர்ந்திருந்துள்ளார். சுமார் 30 நிமிட காத்திருப்பின் பின்னர் தபாலக உத்தியோகத்தர் அந்த இளைஞனை அழைத்து தமிழ் மொழியில் பற்று சீட்டு எழுதி வழங்கியுள்ளார்.

“போக்குவரத்து குற்றத்திற்காக பொலிஸார் வழங்கும் பத்திரம் (தடகொல ) கூட தமிழில் எழுதி வாங்கி இருந்தேன். ஆனால் இங்கே (தபாலகத்தில்) தமிழ் உத்தியோகத்தர் பற்று சீட்டை ஆங்கிலத்தில் எழுதி தர முனைந்த போது, தமிழில் எழுதி தாருங்கள் என கேட்டதற்கு கடமைக்கு இடையூறு என பொலிஸில் முறையிடுவேன் என மிரட்டி பின்னர் எழுதி தந்தார்.

எமது மொழி உரிமையை நாமே காக்க தவற கூடாது. இங்குள்ள தமிழ் உத்தியோகத்தர்கள் பெரும்பாலும் பற்று சீட்டுக்களை ஆங்கில மொழிகளில் எழுதி தருகின்றார்கள். பற்று சீட்டில் தமிழ் மற்றும் சிங்கள மொழிகளில்தான் விபரங்கள் கேட்கப்படுகின்றன. அவ்வாறு இருக்கையில், தமிழ் உத்தியோகத்தர்கள் தமிழில் எழுத பின் நிற்கின்றார்கள்.

அரச திணைக்களங்களில் மற்றும் வங்கிகளில் பற்று சீட்டு பெறும் போது , நான் தமிழில்தான் பெற்றுக்கொள்வேன். ஓரிரு இடங்களில் மாத்திரமே தமிழில் எழுதி தந்தார்கள். மற்றைய இடங்களில் ஆங்கிலத்தில் எழுத முற்படும் போதும் , தமிழில் எழுதி தாருங்கள் என கேட்டால் ஒரு தடவை என்னை வித்தியாசமாக பார்த்துவிட்டு எழுதி தருவார்கள். அதற்காக நான் எனது மொழியுரிமையை எங்கும் விட்டுக்கொடுக்கவில்லை. தற்போதைய இளையோர்களும் தமது மொழியுரிமையை விட்டுகொடுக்க கூடாது” என்று அந்த இளைஞன் தெரிவித்தார்.

- Advertisement -
- Advertisement -

Must Read

கஞ்சாவை விற்பனை செய்ய முயற்சித்த இருவர் செம்மணியில் சிக்கினர்

யாழ்ப்பாணத்தில் வியாபார நோக்கத்துடன் சுமார் 4 லட்சம் ரூபாய் பெறுமதியான 3 கிலோ 300 கிராம் கஞ்சா போதைப்பொருளை கடத்திச் சென்ற இருவர் யாழ்ப்பாணம் மாவட்ட குற்றத்தடுப்பு பொலிஸாரால் கைது...
- Advertisement -

காரைநகரில் தனிமைப்படுத்தப்பட்டவர் யாழ்.போதனா வைத்தியசாலையில் உயிரிழப்பு

காரைநகரில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த ஒருவர் சுகயீனம் காரணமாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை தனிமைப்படுத்தல் விடுதியில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளார். காரைநகரில் கோரோனா தொற்றாளர் அடையாளம்...

ஓஎல் பரீட்சை திட்டமிட்ட திகதிகளில் நடைபெறாது – கல்வி அமைச்சர் அறிவிப்பு

க.பொ.த சாதாரண தரப் பரீட்சை முன்னர் தீர்மானிக்கப்பட்ட தினத்தில் நடைபெறாது என்று கல்வி அமைச்சர், பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் அறிவித்துள்ளார். புதிய திகதி பரீட்சைக்கு 6 வாரங்களுக்கு...

வடமராட்சியில் காணாமற்போயிருந்த இளைஞன் கைகள், கால்கள் கட்டப்பட்ட நிலையில் வீதியிலிருந்து மீட்பு

வடமராட்சி - பருத்தித்துறை பகுதியில் காணமற்போயிருந்த இளைஞர் ஒருவர் கைகளும் கால்களும் கட்டப்பட்ட நிலையில் வீதியில் மீட்கப்பட்டு பருத்தித்துறை - மந்திகை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்டுள்ளார்.

Related News

கோவிட் -19 நோயால் மேலும் இருவர் சாவு; இரண்டாவது அலையால் பாதித்தோர் எண்ணிக்கை 20,000ஐத் தாண்டியது

நாட்டில் இன்று (நவ.30) திங்கட்கிழமை கோவிட் -19 நோயாளிகள் இருவர் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் நாட்டில் கோவிட் -19 நோயால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 118ஆக உயர்வடைந்துள்ளது.
- Advertisement -
error: Alert: Content is protected !!