Friday, September 22, 2023
Homeஅரசியல்தமிழ் இனப்படுகொலை நினைவேந்தல் தினம்; கனேடிய பிரதமரின் அறிவிப்பை நிராகரிக்கிறது இலங்கை

தமிழ் இனப்படுகொலை நினைவேந்தல் தினம்; கனேடிய பிரதமரின் அறிவிப்பை நிராகரிக்கிறது இலங்கை

கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ ஜூலை 23 அன்று வெளியிட்ட அறிக்கையில் தமிழ் இனப்படுகொலை நினைவு தினம் என்ற குறிப்பை தயக்கமின்றி நிராகரிப்பதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

இலங்கையில் கடந்த கால மோதல்கள் பற்றிய தவறான, திரிபுபடுத்தப்பட்ட கதையை கனடா தொடர்ந்து குறிப்பிடுவது, உள்ளூர் வாக்கு வங்கி தேர்தல் ஆதாயங்களை மட்டுமே இலக்காகக் கொண்டது என்றும், இது பரந்த இன நல்லிணக்க இலக்குகளுக்கு உகந்தது அல்ல என்றும் வெளியுறவு அமைச்சு அறிக்கை ஒன்றை வெளியிட்டது.

இலங்கையின் அனைத்துப் பகுதிகளிலும் உள்ள அனைத்து சமூகங்களுக்கிடையில் உறுதித்தன்மை, முன்னேற்றம், சமாதானம் மற்றும் நல்லிணக்கத்தை உறுதிப்படுத்தும் முயற்சிகளில் இலங்கைக்கு ஆதரவளிக்குமாறு கனடாவையும் அதன் தலைவர்களையும் இலங்கை வலியுறுத்துகிறது.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular