திருமலை நீதிமன்றுக்கு பெரும் பட்டாளத்துடன் வந்த வன்னியூர் செந்தூரன்

கிழக்குப் பல்கலைக்கழகத்தின் திருகோணமலை வளாக விரிவுரையாளர் போதநாயகியின் உயிரிப்புத் தொடர்பான இறப்பு விசாரணை திருகோணமலை நீதிவான் நீதிமன்றில் இன்று எடுத்துக் கொள்ளப்பட்ட போது, அவரது கணவர் வன்னியூர் செந்தூரன், சுமார் 40 பேருடன் நீதிமன்றுக்கு சமூகமளித்தார் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

விரிவுரையாளர் போதநாயகியின் உயிரிழப்புடன் அவர் மீது பல்வேறு குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டன. அத்துடன், வன்னியூர் செந்தூரன் தலைமறைவாகிவிட்டார் என்று செய்திகள் வெளியிடப்பட்ட நிலையில் உறவினர்கள், நண்பர்களுடன் அவர் இன்று திருகோணமலை நீதிவான் நீதிமன்றில் தோன்றினார்.

கிழக்குப் பல்கலைக்கழக திருகோணமலை வளாக பெண் விரிவுரையாளரான வவுனியா, ஆசிக்குளத்தைச் சேர்ந்த திருமதி போதநாயகி செந்துரன் (வயது-29) என்ற கர்ப்பிணி பெண் கடந்த செப்ரெம்பர் 20ஆம் திகதி திருகோணமலை கடற்கரையில் சடலமாக மீட்கப்பட்டார்.

அவரது உயிரிழப்புத் தொடர்பில் பல்வேறு சந்தேகங்கள் எழுந்தன. அவை தொடர்பில் ஊடகங்கள் பல்வேறு செய்திகளை வெளியிட்டன.

இந்த நிலையில் விரிவுரையாளரின் கணவர் வன்னியூர் செந்தூரனின் தரப்பு முந்திக் கொண்டு கிளிநொச்சியைத் தளமாகக் கொண்ட சுயாதீன செய்தியாளர் ஒருவருக்கு எதிராக அவதூறைப் பரப்பியது.

இதனால் வன்னியூர் செந்தூரனின் மறுபக்கம் தொடர்பில் ஊடகங்கள் கிண்ட வெளிக்கிட்டன. அதனால் அவர் தனது முகநூல் கணக்கையும் முடக்கிவைத்துவிட்டு பொது வெளியிலிருந்து ஒதுங்கினார்.

அதனால் அவர் தலைமறைவாகிவிட்டார் என்று ஊடகங்கள் சந்தேகம் வெளியிட்டன. இந்த நிலையில் வன்னியூர் செந்தூரன் இன்று திருகோணமலை நீதிவான் நீதிமன்றில் தோன்றினார்.

அவருடன் உறவினர்கள், நண்பர் என சுமார் 40 பேர் வந்திருந்தனர் என்று பொலிஸார் தெரிவித்தனர். அவர்கள் போதநாயகியின் சகோதரர்களுடன் முரண்பட்டுக்கொண்டனர் என்றும் பொலிஸார் குறிப்பிட்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here