திஷார, சந்திமலுக்கு இலங்கை இராணுவத்தில் மேஜர் பதவி

0

இலங்கை கிரிக்கெட் அணியின் வீரர்கள் இருவருக்கு இராணுவ மேஜராக (தொண்டர் படை) பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.

திஷார பெரேரா மற்றும் தினேஷ் சந்திமல் ஆகிய இருவருக்குமே இலங்கை இராணுவத்தால் மேஜர் பதவி வழங்கிக் கௌரவிக்கப்பட்டது.

இன்று ( ஒக்.9) முதல் அவர் இலங்கை இராணுவத்தில் புதிய மேஜர்களாக இணைகிறார்கள்.

அவர்களுக்கான பதவி நிலையை இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் சவேந்திர சில்வா வழங்கிவைத்தார்.