Tuesday, December 5, 2023
Homeவிளையாட்டு செய்திகள்தேசியமட்ட பூப்பந்தாட்டத்தில் யாழ். மாவட்ட வீரர்கள் சாதித்தனர்

தேசியமட்ட பூப்பந்தாட்டத்தில் யாழ். மாவட்ட வீரர்கள் சாதித்தனர்

தேசியமட்ட பூப்பந்தாட்ட போட்டியில் 30 வயதுக்கு மேற்பட்டோருக்கான யாழ்ப்பாணம் மாவட்ட வீரர்கள் சாதித்து பதக்கங்களை பெற்றுள்ளனர்.

வடமாகாண பூப்பந்தாடட சங்கத்தின் அனுசரணையுடன் இலங்கை பூப்பந்தாட்ட சங்கம் முதன்முறையாக தேசியமட்ட பூப்பந்தாட்ட சுற்றுப்போட்டியை நடத்தியது. ஒக்டோபர் 31ஆம் திகதி தொடக்கம் 04ஆம் திகதி சனிக்கிழமை வரை இந்த சுற்றுப்போட்டி கிளிநொச்சி உள்ளக விளையாட்டரங்கில் இடம்பெற்றது.

30 வயதுக்கு மேற்பட்ட ஆண்கள் ஒற்றையர் பிரிவில் யாழ்ப்பாணம் மாவட்டத்தைச் சேர்ந்த எல்.றொபின்சன் இரண்டாம் இடத்தைப் பெற்றார்.

30 வயதுக்கு மேற்பட்ட ஆண்கள் இரட்டையர் பிரிவில் யாழ்ப்பாணம் மாவட்டத்தைச் சேர்ந்த எல்.றொபின்சன் மற்றும் ரி.துசாந்தன் இணை இரண்டாம் இடத்தையும் எஸ்.ஜெனகன் மற்றும் எஸ்.ரம்மியராகுலன் இணை மூன்றாம் இடத்தையும் பெற்றனர்.

இந்த பிரிவில் கொழும்பு மாவட்டத்தைச் சேர்ந்த ஆண்கள் இரட்டையர்கள் முதலிடத்தைப் பெற்றனர்.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular