பேராதனை பல்கலைக்கழக உயர் குருதி அழுத்தம் ஆராய்ச்சி நிலையத்தினால் நடத்தப்பட்ட தேசிய மட்ட வினாடி வினா போட்டியில் யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மருத்துவபீட மாணவர்கள் குழு முதலிடம் பிடித்தனர்.
கண்டி பேராதனை பல்கலைக்கழகத்தில் இன்று இடம்பெற்ற இந்த போட்டியில் பேராதனை பல்கலைக்கழகம், யாழ்ப்பாணம் பல்கலைக்கழகம், ராஜரட்ட பல்கலைக்கழகம், கிழக்கு பல்கலைக்கழகம் மற்றும் கொழும்பு பல்கலைக்கழகம் ஆகிய 6 மருத்துவபீட மாணவர்கள் பங்கேற்றனர்.
யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மருத்துவபீட மாணவர்கள் முதலிடம் பெற்று பெருமை சேர்த்தனர்.
யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மாணவர்கள் குழுவில் செல்வி சஹானா உமாசங்கர், செல்வி ராஜபக்ச பத்திரணலகே இஷானி பிரபோதனி ராஜபக்ச, உதயகுமார் யதுஷன், நவரட்ணராஜா துளஷிகன் மற்றும் செல்வி தேனுகா உருத்திரமூர்த்தி ஆகியோர் பங்கேற்றனர்.