சுதந்திரக் கிண்ண கால்பந்தாட்டத்தில் வடக்கு மாகாண அணி சம்பியனானது

இலங்கை உதைபந்தாட்ட சம்மேளனம் நடாத்திய மாகாணங்ளுக்கு இடையிலான சுதந்திர கிண்ண கால்பந்தாட்டப் போட்டியின் இறுதிப்போட்டி இன்றையதினம் யாழ்ப்பாணம் துரையப்பா விளையாட்டரங்கில் நடைபெற்றது.

இறுதிப்போட்டியில் வடக்கு மாகாண அணியை எதிர்த்து தெற்கு மாகாண அணி விளையாடியது.

போட்டியில் 3:1 என்ற கோல் கணக்கில் வடக்கு மாகாண அணி வெற்றிபெற்று சம்பியனானது.

இலங்கை கால்பந்தாட்ட அணி வீரர் யோகேந்திரன் டக்சன் பியூஸ்லஸ் மாலைதீவில் உயிரிழந்த நிலையில் அவரது பூதவுடல் யாழ்ப்பாணத்துக்கு எடுத்துவரப்பட்டு பின்னர் சொந்த மண்ணான மன்னாருக்கு கொண்டு செல்லப்பட்டு அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.

சாதனை வீரர் பியூஸ்லஸுக்கு மரியாதை செலுத்தும் வகையில் இந்த போட்டி யாழ்ப்பாணத்துக்கு மாற்றப்பட்டு நடைபெற்றது. அதனால் பியூஸ்லஸுன் இறுதி அஞ்சலி நிகழ்வும் நாளைமறுதினம் திங்கள் வரை ஒத்திவைக்கப்பட்டது.

டக்சன் பியூஸ்லஸுக்கு அர்ப்பணமாக வடக்கு மாகாண அணி தேசிய மட்டப் போட்டியில் சம்பியனாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.