தொழிற்பயிற்சி பெறும் மாணவர்களுக்கு மாதாந்தம் 4,000 ரூபாய் கொடுப்பனவு

தொழிற்பயிற்சி பெறும் மாணவர்களுக்கு மாதாந்த ஊக்குவிப்புத் தொகையாக 4 ஆயிரம் ரூபாய் வழங்குவதற்கு 2021ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில் முன்மொழியப்பட்டுள்ளது.

இதற்காக 3 ஆயிரம் மில்லியன் ரூபாயை ஒதுக்கீடு செய்வதாக பிரதமரும் நிதியமைச்சருமான மகிந்த ராஜபக்ச முன்மொழிந்தார்.

2021ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்ட முன்மொழிவை நாடாளுமன்றில் முன்வைத்து உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.