Friday, September 22, 2023
Homeஉள்ளூர் செய்திகள்தொழில்முயற்சி பாதிக்கப்பட்ட வாடிக்கையாளர்களுக்கு உதவுதொகை; இந்த ஆண்டும் திட்டத்தை தொடர்கிறது ஹற்றன் நேஷனல் வங்கி

தொழில்முயற்சி பாதிக்கப்பட்ட வாடிக்கையாளர்களுக்கு உதவுதொகை; இந்த ஆண்டும் திட்டத்தை தொடர்கிறது ஹற்றன் நேஷனல் வங்கி

கோவிட்-19 பெருந்தொற்று மற்றும் பொருளாதார நெருக்கடி நிலை காரணமாக சிறுதொழில் முயற்சிகளினால் பாதிக்கப்பட்ட வாடிக்கையாளர்களுக்கு உதவு தொகை வழங்கும் செயற்திட்டத்தை ஹற்றன் நேஷனல் வங்கி இந்த ஆண்டும் தொடர்ந்துள்ளது.

வடக்கு மாகாணத்தில் கடந்த ஆண்டு 66 வாடிக்கையாளர்களுக்கு 6.6 மில்லியன் ரூபாயை உதவு தொகை வழங்கி ஊக்குவித்த ஹற்றன் நேஷனல் வங்கி, இந்த ஆண்டு மேலும் 100 வாடிக்கையாளர்களுக்கு வழங்குவதற்காக 10 மில்லியன் ரூபாயை ஒதுக்கியுள்ளது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த உதவு தொகையை வழங்கும் செயற்திட்டம் ஹற்றன் நேஷனல் வங்கியின் வடபிராந்திய அலுவலகத்தினால் இன்று ஆரம்பித்துவைக்கப்பட்டது.

இன்றைய நிகழ்வில் வடமாகாண விசாயப் பணிப்பாளர் திருமதி சுகந்தினி செந்தில்குமரன் பங்கேற்றார்.

ஹற்றன் நேஷனல் வங்கியின் வடபிராந்தியத்தின் வியாபாரப் பிரிவின் தலைவர் நிஷாந்தன் கருணராஜ், கடன் பிரிவு தலைவர் மகேசன் தயாகரன், பருத்தித்துறை வங்கிக் கிளையின் முகாமையாளர் திருமதி அகல்யா பாபுஜி மற்றும் வங்கி அலுவலகர் பங்கேற்றனர்.

இந்த உதவு தொகை எதற்காக?

கோவிட்-19 பெருந்தொற்று மற்றும் நாட்டின் பொருளாதார நெருக்கடியினால் பாதிக்கப்பட்ட வங்கியின் நுண்நிதியியல் திட்டத்தின் கீழ் சேவையைப் பெறும் வாடிக்கையாளர்கள் தொழில்முயற்சியை மீளவும் ஆரம்பித்தல் மற்றும் தொழில்முயற்சியை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் செல்வதற்காக ஹற்றன் நேஷனல் வங்கியினால் கடந்த மூன்று ஆண்டுகளாக உதவுதொகை வழங்கப்படுகிறது.

ஹற்றன் நேஷனல் வங்கியின் கூட்டாண்மை சமூக பொறுப்பு (Corporate social responsibility) திட்டத்தின் கீழ் இந்த நிதி உதவி வாடிக்கையாளர்களுக்கு தலா ஒரு லட்சம் என்ற அடிப்படையில் வழங்கப்படுகிறது.

வடக்கு மாகாணத்தில் கடந்த மூன்று ஆண்டுகளில் 66 வாடிக்கையாளர்களுக்கு 6.6 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது.

இந்த உதவு தொகையை இந்த ஆண்டு 100 வாடிக்கையாளர்களுக்கு பகிர்ந்தளிப்பதற்காக 10 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்று வங்கியின் வடபிராந்திய அலுவலகம் அறிவித்துள்ளது.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular