தோனியை அடுத்து ஓய்வை அறிவித்தார் சுரேஷ் ரெய்னா

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலிருந்து இந்திய அணியின் முன்னாள் தலைவர் தோனி ஓய்வை அறிவித்த சில நிமிடங்களில் சுரேஷ் ரெய்னாவும் தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக தெரிவித்துள்ளார்.

சென்னையில் பிரீமியர் கிரிக்கெட் போட்டிகளுக்காக பயிற்சிப்பெற்று வரும் தோனி இன்று இரவு தனது இன்ஸ்டா பக்கத்தில் , உங்களுடைய அன்புக்கும் ஆதரவுக்கும் எப்போதும் நன்றி இன்று இரவு 7.29 மணி முதல் நான் ஓய்வு பெறுகிறேன் என பகிர்ந்துள்ளார். இந்த செய்தியை ஏஎன்ஐ உறுதி செய்துள்ளது.

- Advertisement -

இதனையடுத்து இந்திய வீரர் சுரேஷ் ரெய்னா தன்னுடைய இன்ஸ்டா பதிவில் உங்களுடன் விளையாடி நாள்கள் அருமையானது. முழு மன திருப்தியுடன் நானும் உங்களின் வழியை தேர்ந்தெடுக்கிறேன், உங்களின் பயணத்தில் பங்கேற்கிறேன். இந்தியாவுக்காக விளையாடியது மிகப்பெரிய பெருமை, நன்றி இந்தியா, ஜெய்ஹிந்த் என தெரிவித்துள்ளார்.

- Advertisement -
- Advertisement -

Must Read

- Advertisement -

Related News

- Advertisement -
error: Alert: Content is protected !!