வரலாற்றுச் சிறப்புமிக்க நயினாதீவு நாகபூஷணி அம்மன் வீதியில் நேற்று நாகங்கள் வலம் வந்துள்ளன.
நயினாதீவு நாகபூஷணி அம்மன் ஆலய வருடாந்த திருவிழா நாளை (ஜூன் 19) கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ளது.
ஆலய வீதியில் துப்பரவு பணியில் ஈடுபட்ட நிலையில் மேற்கு வீதி கற்குவியலுக்குள் இருந்து நாக பாம்புகள் வெளிவந்துள்ளன.
மூன்று நாகங்கள் ஆலய வீதியில் படம் எடுத்து காட்சி கொடுத்துச் சென்றதில் பக்தர்கள் பரவசமடைந்ததாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.


