நல்லூரில் அகண்ட காட்சித் திரையை இராணுவம் அமைத்ததன் பின்னணி என்ன?

நல்லூர் கந்த சுவாமி ஆலய பெருந்திருவிழா ஆரம்பமாகியுள்ள நிலையில் ஆலய சுற்றுப்புற வீதிகளில் போடப்பட்டுள்ள வீதித் தடைக்குள் தமது வாகனத்தை எடுத்து வந்து இராணுவத்தினர் பிரமாண்ட காட்சித் திரையை அமைத்தமை பலருக்கு சந்தேகங்களை எழுப்பியுள்ளன.


இந்தச் சம்பவம் இன்று (17) வெள்ளிக்கிழமை இடம்பெற்றது.

- Advertisement -

வீதித் தடையையும் தாண்டி இராணுவ வாகனத்தில் வந்த படையினர் சிலர், நல்லூர் ஆலயத்தின் முகப்பு வீதியில் பிரமாண்டமான எல்லிடி காட்சித் திரையை அமைத்தனர்.

இதனால் அந்தப் பகுதியில் நின்றவர்களுக்கு பலத்த சந்தேகம் எழுந்தது. சம்பவம் தொடர்பில் அவர்கள் ஊடகங்களுக்கு தெரியப்படுத்தினர்.

சம்பவ இடத்துக்குச் சென்ற ஊடகவியலாளர்கள் சிலர், இராணுவத்தினரால் அமைக்கப்படும் காட்சித் திரை தொடர்பில் யாழ்ப்பாண மாநகர சபை நிர்வாகத்திடம் கேள்வி எழுப்பினர்.

அந்த இடத்தில் தமிழ் ஊடகம் ஒன்று (இணையத்தளம் மற்றும் தொலைக்காட்சி ஒலிபரப்புச் சேவை) காட்சித் திரை அமைப்பதற்கான விண்ணப்பத்தைச் செய்தது என்று தெரிவித்தனர். எனினும் இராணுவத்தினர் அதனை அமைப்பது தொடர்பில் தமக்கு எதுவுமே தெரியாது என்றும் மாநகர சபை நிர்வாகத்தினர் குறிப்பிட்டனர்.

யாழ்ப்பாண மாநகர சபை நிர்வாகத்தின் தெளிவற்ற பதிலையடுத்து, ஊடகவியலாளர்கள் நேரடியாக இராணுவத்தினரிடமே அவர்களால் அமைக்கப்படும் காட்சித் திரை குறித்து கேள்வி எழுப்பினர்.

தமிழ் ஊடகம் ஒன்று (இராணுவத்தினர் பெயரைக் குறிப்பிட்டனர்) இராணுவ எல்லிடி காட்சித் திரையை வாடகைக்கு அமர்த்தி உள்ளதாக அவர்கள் பதிலளித்தனர். அதனைப் பொருத்தி வழங்குமாறு கேட்கப்பட்டுள்ளதால் அந்தப் பணியில் தாம் ஈடுபடுவதாகவும் இராணுவத்தினம் கூறினர்.

- Advertisement -
- Advertisement -

Must Read

- Advertisement -

Related News

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

error: Alert: Content is protected !!