வரலாற்று சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலய பெருந்திருவிழாவின் 21ஆவது நாளான இன்று ஞாயிற்றுக்கிழமை மாலை தங்க ரதத்தில் வள்ளி, தெய்வானை சமேதராய் முருகப்பெருமான காட்சியளித்தார்.
பெருந்திரளான பக்தர்கள் கலந்துகொண்டிருந்தனர்.





நாளைமறுதினம் 12ம் திகதி மாலை சப்பரத் திருவிழாவும் 13ஆம் திகதி காலை தேர்த்திருவிழாவும் 14ஆம் திகதி காலை தீர்த்த திருவிழாவும் நடைபெறவுள்ளது.