நாடாளுமன்றை ஒத்திவைத்தார் ரணில்

இன்று நள்ளிரவு நடைமுறைக்கு வரும் வகையில் நாடாளுமன்றை ஒத்திவைப்பதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அறிவித்துள்ளார்.

அதிசிறப்பு அரசிதழ் அறிவிப்பு ஊடாக இந்தக் கட்டளையை ஜனாதிபதி பிறப்பித்துள்ளார்.

எதிர்வரும் ஒகஸ்ட் 3ஆம் திகதி முற்பகல் 10 மணிக்கு நாடாளுமன்றம் மீண்டும் கூட்டப்படும் என்று ஜனாதிபதி தனது அறிவிப்பில் குறிப்பிட்டுள்ளார்.

இதன்மூலம் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் நாடாளுமன்றம் எதிர்வரும் 3ஆம் திகதி ஆரம்பமாகும்.