நாடுமுழுவதுமுள்ள மருத்துவமனைகளுக்கு 1,117 மருத்துவர்கள் உள்ளகப் பயிற்சிக்கு நியமனம்

0

நாடுமுழுவதும் உள்ள வைத்தியசாலைகளுக்கு ஆயிரத்து 117 உள்ளகப் பயிற்சி மருத்துவர்களுக்கு சுகாதார அமைச்சால் நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

நாளைமறுதினம் (ஒக்.20) செவ்வாய்க்கிழமை நடைமுறைக்கு வரும் வகையில் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளதாக கடமைநிறைவேற்று சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் மருத்துவர் எஸ்.ஸ்ரீதரன் அறிவித்துள்ளார்.

நாடுமுழுவதும் உள்ள மருத்துவமனைகளில் மருத்துவர்களுக்கு நிலவும் வெற்றிடங்களை நிரப்ப இந்த நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளது என்று சுகாதார அமைச்சுக் குறிப்பிட்டுள்ளது.

புதிய நியமனங்கள் அடங்கிய பெயர் பட்டியல் சுகாதார அமைச்சின் http://www.health.gov.lk/moh_final/english/others.php?pid=77 என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

பதவிகளில் நியமிக்கப்பட்டவர்கள் அந்தந்த பணி நிலையங்களுக்கு உரிய திகதியில் அறிக்கை அளிக்க வேண்டும் என்றும் கடமைநிறைவேற்று சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் மருத்துவர் எஸ்.ஸ்ரீதரன் தெரிவித்தார்.