நாட்டின் சகல பாடசாலைகளிலும் நாளை கல்வி நடவடிக்கைகள்

நாட்டிலுள்ள அனைத்து பாடசாலைகளினதும் கல்வி நடவடிக்கைகள் நாளை செவ்வாய்கிழமை (மே 17) முதல் மீண்டும் ஆரம்பமாகும் என்று கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

நாளை ஆரம்பமாகும் பாடசாலைகள் க.பொ.த சாதாரண தரப் பரீட்ச்சைக்காக வரும் 27ஆம் திகதி வெள்ளிக்கிழமை விடுமுறை வழங்கப்பட்டு மீளவும் ஜூன் 6ஆம் திகதி ஆரம்பமாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

க.பொ.த சாதாரண தரப் பரீட்சையுடன் தொடர்புடைய மேலதிக வகுப்புகள் மற்றும் கருத்தரங்குகளை நடத்துவதற்கு நாளை(17) நள்ளிரவு முதல் பரீட்சை நிறைவடையும் வரை தடை விதிக்கப்பட்டுள்ளது என்று பரீட்சைகள் திணைக்களம் என்று தெரிவித்துள்ளது.