நாட்டின் பல பகுதிகளில் கடுமையான வெப்பம் காரணமாக பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
வடக்கு, மேற்கு உள்பட நாட்டில் பல பகுதிகளுக்கு “வெப்ப சுட்டெண் ஆலோசனை” என அழைக்கப்படுவதை வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ளது.
மேல், தெற்கு, கிழக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் குருநாகல், கிளிநொச்சி, வவுனியா மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களிலும் சில இடங்களில் வெப்பச் சுட்டெண், மனித உடலில் உணரப்படும் வெப்பநிலை ‘எச்சரிக்கை’ மட்டத்திற்கு அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. .
வெப்ப குறியீட்டு முன்னறிவிப்பு ஈரப்பதம் மற்றும் அதிகபட்ச வெப்பநிலையைப் பயன்படுத்தி கணக்கிடப்படுகிறது மற்றும் இது ஒரு நபரின் உடலில் உணரப்படும் நிலையாகும்.
சுகாதாரம் மற்றும் சுதேச மருத்துவ சேவைகள் அமைச்சின் ஆலோசனையின்படி தயாரிக்கப்பட்ட சுட்டெண்ணின்படி, ‘எச்சரிக்கை’ நிலை என்பது நீண்டகால வெளிப்பாடு மற்றும் செயல்பாடுகளால் சோர்வு சாத்தியமாகும் மற்றும் வெப்ப பிடிப்புகளையும் ஏற்படுத்தும்.
அதன்படி, வெளிக்கள பணியிடங்களில் பணிபுரிந்தால், முடிந்தவரை அடிக்கடி நிழலில் ஓய்வெடுக்கவும், வெளியில் வேலை செய்வதைக் கட்டுப்படுத்தவும், முதியவர்கள் மற்றும் நோய்வாய்ப்பட்டவர்களைக் கவனிக்கவும், குழந்தைகளை வாகனங்களில் கவனிக்காமல் விட்டுச் செல்வதைத் தவிர்க்கவும் மற்றும் இலகுரக மற்றும் வெள்ளை அல்லது வெளிர் நிற ஆடையை அணியவும் வளிமண்டலத் திணைக்களம் பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.