நாட்டிலிருந்து புறப்படும் அனைவருக்கும் பிசிஆர் பரிசோதனை அவசியம் – புதிய கட்டுப்பாடு அறிவிப்பு

0

நாளை (ஒக். 18) ஞாயிற்றுக்கிழமை மாலை 6 மணி முதல், இலங்கையிலிருந்து புறப்படும் அனைத்து பயணிகளும் அவர்கள் புறப்படுவதற்கு 72 மணி நேரத்திற்கு முன்பாக பி.சி.ஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட வேண்டும் என்று விமான நிலையம் மற்றும் விமான சேவைகள் நிறுவனம் அறிவித்துள்ளது.

“பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையம் மற்றும் நாட்டின் பிற விமான நிலையங்களைப் பயன்படுத்தும் அனைத்து வெளிச்செல்லும் பயணிகளும் தங்களது பி.சி.ஆர் சோதனைகளை தாங்கள் புறப்படுவதற்கு முன் குறைந்தது 72 மணி நேரத்திற்குள் செய்ய வேண்டும்.

நாட்டில் கோவிட் -19 நோய்த் தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்ததைத் தொடர்ந்து புதிய உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன.

கோரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த அதிகாரிகள் எடுத்த இந்த நடவடிக்கைகளுக்கு பொதுமக்கள் ஆதரவை வழங்கவேண்டும்” என்று விமான நிலையம் மற்றும் விமான சேவைகள் நிறுவனத்தின் துணைத் தலைவர் ராஜீவ் சூரியராச்சி கேட்டுக்கொண்டுள்ளார்.