நாட்டில் உள்ள 65 சதவீத நிரப்பு நிலையங்களில் எரிபொருள் இல்லை

தற்போதைய எரிபொருள் நெருக்கடி காரணமாக நாடுமுழுவதும் உள்ள 65 சதவீத எரிபொருள் நிரப்பு நிலையங்களில் போதிய எரிபொருள் கிடைப்பதில்லை என தெரியவந்துள்ளது.

பெற்றோல், டீசல் மற்றும. மண்ணெண்ணெய் இல்லாமல் சில எரிபொருள் நிரப்பும் நிலையங்களை மூட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

சில எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு ஒரே ஒரு வகை எரிபொருள் மட்டுமே வந்து சேர்வதாகவும், கையிருப்பு தீர்ந்தவுடன் எரிபொருள் கிடைக்கும் வரை அந்த நிரப்பு நிலையங்கள் மூடப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டில் மொத்த பெற்றோல் இருப்பு 4 ஆயிரம் மெற்றிக் தொன்களாக குறைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

பெற்றோல் ஏற்றி வரும் கப்பல் ஒன்று எதிர்வரும் 22ஆம் திகதி இலங்கையை வந்தடைய உள்ளதாக இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

இந்தியாவிலிருந்து 40 ஆயிரம் மெற்றிக் தொன் டீசல் வந்தாலும், டீசல் விநியோகம் இன்னும் தடை செய்யப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

டீசல் கப்பல் இறக்கும் பணி தொடரும். கொலன்னாவ மற்றும் முத்துராஜவெல எரிபொருள் குதங்களில் டீசல் இறக்கப்படும்.

இதேவேளை, எதிர்காலத்தில் எரிபொருள் மற்றும் கச்சா எண்ணெயை இறக்குமதி செய்யும் திட்டம் தொடர்பில் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர பின்வரும் கருத்துக்களை வெளியிட்டார்.

நேற்றைய தினம் ஜனாதிபதியுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது, ​​நிதியமைச்சும் மத்திய வங்கியும் அரச மற்றும் தனியார் வங்கிகளுடன் இணைந்து கடன் கடிதங்களை வழங்குவதற்கு திட்டமிடுவதற்கும், போதுமான எரிபொருள் இருப்புக்களை ஒழுங்குபடுத்துவதற்கும் தீர்மானிக்கப்பட்டது.

நீண்ட கால எரிபொருள் கிடைப்பதற்காக வழங்குநர்களுடன் உடன்படிக்கைகளை மேற்கொள்ளும் சாத்தியம் குறித்தும் சிறப்புக் கவனம் செலுத்தப்பட்டது.

இதேவேளை, 3 லட்சம் பீப்பாய் பெற்றோல் கொள்வனவுக்காக 42.66 மில்லியன் அமெரிக்க டொலர் கடனுதவி நேற்று திறந்து வைக்கப்பட்டது – என்றார்