நாட்டில் கோவிட் -19 நோயால்
மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளார் என்று அரச தகவல் திணைக்களம் இன்று புதன்கிழமை அறிவித்துள்ளது.
இதன்மூலம் நாட்டில் கோவிட் -19 நோயால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 274ஆக உயர்வடைந்துள்ளது.
கொழும்பு தேசிய தொற்றுநோயியல் வைத்தியசாலையில் (ஐடிஎச்) சிகிச்சை பெற்று வந்த 53 வயதுடைய பெண் உயிரிழந்தமை தொடர்பிலேயே அறிவிக்கப்பட்டுள்ளது. எனினும் மன்னார் வைத்தியசாலையில் கோவிட் -19 நோயால் நேற்று உயிரிழந்தவர் தொடர்பில் இன்னும் உத்தியோகபூர்வ அறிவிப்பை அரச தகவல் திணைக்களம் வெளியிடவில்லை.

அத்துடன், நாட்டில் இன்று 768 பேர் கோவிட் -19 நோய்த் தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர் என்று கண்டறியப்பட்டுள்ளது.

நாட்டில் ஜனவரி மாதம் முதல் இன்று வரை 55 ஆயிரத்து 189 பேர் கோரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 47 ஆயிரத்து 216 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சைப் பெற்று குணமடைந்துள்ளனர். 274 பேர் உயிரிழந்துள்ளனர்.