இலங்கையில் கோரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 50 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது.
நாட்டில் இன்று இரவு 8.15 மணிவரையான நிலவரத்தின் அடிப்படையில் மேலும் 687 பேர் கோரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.
ஒக்டோபர் 4ஆம் திகதிக்கு பின் ஏற்பட்ட மினுவாங்கொட – பேலியகொட மற்றும் சிறைச்சாலைகள் கோரோனா பரவல் கொத்தணியில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 46 ஆயிரத்தைத் தாண்டியது.
நாட்டில் ஜனவரி மாதம் முதல் இன்று வரை 50 ஆயிரத்து 224 பேர் கோரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 7 ஆயிரத்து 50 பேர் சிகிச்சை நிலையங்களில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 244 பேர் உயிரிழந்துள்ளனர்.