நாட்டில் கோவிட்-19 வைரஸ் பரவல் நிலமை இன்னும் சாதகமாக இல்லை -சுகாதார அமைச்சு

நாட்டில் தினசரி பதிவாகும் கோவிட் -19 தொற்றாளர்களின் எண்ணிக்கையில் சாதகமான சூழ்நிலை காணப்படவில்லை என்று சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் நாயகம், மருத்துவர் ஹேமந்த ஹேரத் தெரிவித்தார்.

இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் செய்தியாளர் ஒருவரினால் எழுப்பப்பட்ட கேள்விக்கு அவர் இவ்வாறு பதிலளித்தார்.
நாட்டில் அண்மைய நாள்களில் பதிவாகும் தினசரி தொற்றாளர்களின் எண்ணிக்கை குறைந்து வருவது, நாட்டை மீண்டும் திறப்பதற்கான ஒரு பச்சை விளக்காக கருதப்படலாமா? என்று செய்தியாளர் கேட்டார்.
“அவ்வாறு நம்பவில்லை. கோவிட்-19 வைரஸ் தொற்று நிலமை 100 சதவீதம் ஏற்கத்தக்கது அல்ல.

- Advertisement -

தனிமைப்படுத்தப்பட்ட ஊரடங்குக்கு மத்தியில் தற்போது பதிவான தொற்றாளர்களின் எண்ணிக்கை ஒப்பீட்டளவில் அதிகமாக உள்ளது. நாடு திறக்கப்பட்டிருந்த போது கண்டறியப்பட்ட கோவிட்-19 தொற்றாளர்களின் எண்ணிக்கை போன்று தற்போதும் நீடிக்கிறது.

எனவே, சுகாதார விதிமுறைகளை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும்” என்று மருத்துவர் ஹேமந்த ஹேரத் பதிலளித்தார்.

- Advertisement -
- Advertisement -

Must Read

- Advertisement -

Related News

- Advertisement -
error: Alert: Content is protected !!