நாட்டில் மேலும் 160 பேர் ஒமிக்ரோன் தொற்றுடன் அடையாளம்

இலங்கையில் கோவிட்-19 ஒமிக்ரோன் வைரஸ் தொற்றுடன் மேலும் 160 நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் ஒவ்வாமை, நோயெதிர்ப்பு மற்றும் உயிரணு உயிரியல் நிறுவனத்தின் பணிப்பாளர் கலாநிதி சந்திம ஜீவந்தர தெரிவித்துள்ளார்.
டிசம்பர் 3, 2021 அன்று முதல் Omicron கேஸ் கண்டறியப்பட்டது, அதன்பிறகு இந்த எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

இன்று கண்டறியப்பட்ட 160 ஒமிக்ரோன் நோயாளிகளையும் சேர்த்து, இலங்கையில் மொத்த ஒமிக்ரோன் நோயாளிகளின் எண்ணிக்கை 200ஐ தாண்டியுள்ளது.