நாளைமுதல் ஒரு மணிநேர மின்வெட்டு

மின்வெட்டு ஒரு மணி நேரமாக குறைக்கப்பட்டுள்ளது.

அதன்படி, ஏ முதல் எல் வரை மற்றும் பி முதல் டபிள்யூ வரையிலான வலயங்களுக்கு நாளை முதல் ஒரு மணித்தியாலம் இரவு நேர மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்படும் என்று இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

கடந்த பல வாரங்களில், நாட்டில் தினசரி மூன்று மணி நேர மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.