நாளை தொடக்கம் 80,000 எரிவாயு சிலிண்டர்கள் நாளொன்றுக்கு விநியோகம்

நாடுமுழுவதும் நாளை தொடக்கம் 80 ஆயிரம் சமையல் எரிவாயு சிலிண்டர்களை விநியோகிக்கும் பணி ஆரம்பமாகும் என்று லிட்ரோ காஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.

“சமையல் எரிவாயு ஏற்றி வந்த இரண்டு கப்பல்களுக்கு பணம் விடுவிக்கப்பட்டுள்ளது.

அதனடிப்படையில் 2 ஆயிரத்து 800 மெட்ரிக் தொன் சமையல் எரிவாயு கொண்ட கப்பலில் இருந்து இறக்கும் பணி இன்று இரவு ஆரம்பிக்கப்படும்.

அத்துடன், நாளை (மே 18) முதல் நாளொன்றுக்கு 80 ஆயிரம் சமையல் எரிவாயு சிலிண்டர்கள் விநியோகிக்கப்படும்” என்றும் அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.