நாளை முதல் எரிவாயு விநியோகம் செய்யப்படும் என லாஃப் நிறுவனம் அறிவிப்பு

லாஃப் எரிவாயு விநியோகம் சில மாதங்களுக்குப் பின்னர் நாளை ஆரம்பிக்கப்படும் என நிறுவனத்தின் தலைவர் டபிள்யூ.ஜே. கே. எச். வேகபிடிய தெரிவித்தார்.
இன்று 3 ஆயிரத்து 500 மெற்றிக் தொன்களை ஏற்றி வந்த கப்பல் கொழும்பை வந்தடைந்த நிலையில் தரையிறங்கும் பணிகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
லாஃப் எரிவாயு விலை அதிகரிக்கப்படும் என்ற செய்தி உண்மைக்குப் புறம்பானது எனவும் அந்த நிறுவனத்தின் தலைவர் கூறினார்.

இதேவேளை, உள்நாட்டு எரிவாயு சிலிண்டர்களை இன்றும் நாளையும் சந்தைக்கு வெளியிடப்போவதில்லை என்று லிட்ரோ காஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.

இதேவேளை, அரசு முறையாக எரிவாயு விநியோகிக்கவில்லை என குற்றம் சுமத்தி இன்று சில பிரதேசங்களில் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.

எரிவாயு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில் மண்ணெண்ணெய் பெறுவதற்கு மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். நாடுமுழுவதும் பல எரிபொருள் நிரப்பு நிலையங்களில் நிலவும் டீசல் தட்டுப்பாடு இன்னும் தீர்க்கப்படவில்லை என்று சுட்டிக்காட்டப்பட்டது.