நாளை முதல் நடைமுறைக்கு வரும் வகையில் ஒட்டுமொத்தமாக 14.2 சதவீத மின்சாரக் கட்டணக் குறைப்புக்கு இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு ஒப்புதல் வழங்கியுள்ளது.
மாதத்திற்கு 0 – 30 அலகுகள் வரையிலான குறைந்த மின்சாரத்தைப் பயன்படுத்துபவர்கள் நாளை முதல் 65 சதவீத மின் கட்டணக் குறைப்பைப் பெறுவார்கள் என்று பொதப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
- 31-60 அலகுகளின் கீழ் உள்ள மின் பயனீட்டாளர்களுக்கு 51.5 சதவீதம் குறைப்பு
- 61-90 அலகுகள் பிரிவின் கீழ் உள்ள மின் பயனீட்டாளர்களுக்கு 24.5 சதவீதம் குறைப்பு
- ஹோட்டல் துறையில் 26.3 சதவீதம் குறைப்பு
- தொழில் பிரிவில் 9 சதவீதம் குறைப்பு
- வணிக கட்டடங்களில் 5 சதவீதம் குறைப்பு
- மத நோக்கப் பிரிவில் 16 சதவீதம் ஒட்டுமொத்த குறைப்பு
– அரசு மீது 0.8 சதவீதம் குறைப்பு
தெருவிளக்கு நுகர்வு அளவிடப்பட வேண்டும் அல்லது மதிப்பிடப்பட வேண்டும். மேலும் உள்ளூராட்சி சபை அல்லது வீதி அபிவிருத்து அதிகார சபையிடம் கட்டணம் வசூலிக்கப்படும்.
நுகர்வோரிடமிருந்து பெறப்பட்ட பாதுகாப்பு வைப்புத்தொகை முதலீடு செய்யப்படும் மற்றும் முதலீட்டின் மீதான வருவாயில் இருந்து வட்டி செலுத்தப்படும்.
மின்சாரம் வழங்குவதற்காக பெறப்பட்ட ஏதேனும் பாதுகாப்பு வைப்புத்தொகைக்கான வட்டி அனைத்து நுகர்வோரின் மாதாந்திர மின் பட்டியலில் இருந்து கழிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

