நாளை 3 மணி 40 நிமிடங்கள் மின்வெட்டு

நாளைய தினம் 3 மணி 40 நிமிடங்கள் மின்வெட்டை மேற்கொள்ள பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு இலங்கை மின்சார சபைக்கு அனுமதி வழங்கியுள்ளது.

அதன்படி, ஏ முதல் டபிள்யூ வரையிலான 20 வலயங்களில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை 2 மணி நேரமும், மாலை 5 மணி முதல் இரவு 10 மணி வரை 1 மணி நேரம் 40 நிமிடங்களும் மின் துண்டிக்கப்படும்.

கொழும்பு நகர வலயத்தில் காலை 6 மணி முதல் 9 மணி வரை 3 மணி நேரம் மின்வெட்டு இருக்கும்.