நாளை 5 மணிநேர மின்வெட்டு; வெசாக் போயா தினத்தில் முழுநேர மின் விநியோகம்

வெசாக் போயா தினத்தில் மின்வெட்டு நடைமுறைப்படுத்துவது இல்லை என்று தீர்மானிக்கப்பட்டுள்ளது.

நாளை 5 மணித்தியால மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

இதேவேளை, எதிர்வரும் காலங்களில் நீண்ட நேர மின்வெட்டு ஏற்படும் என வெளியாகும் செய்திகள் உண்மைக்குப் புறம்பானவை என்றும் அவர் வலியுறுத்தினார்.