நாவற்குழி சிவபூமி திருவாசக அரண்மனையில் 108 சிவலிங்கங்களுக்கு அடியவர்கள் அபிசேகம் செய்ய ஏற்பாடு

நாவற்குழியில் அமைந்துள்ள சிவபூமி திருவாசக அரண்மனையில் மகா சிவராத்திரி விரத திருவிழா நாளை பக்திபூர்வமாக இடம்பெறவுள்ளது.

சிவனடியவர்கள் நாளை வியாழக்கிழமை அதிகாலை 5 மணி தொடக்கம் நாளைமறுதினம் வெள்ளிக்கிழமை அதிகாலை 5 மணிவரை திருவாசக அரண்மனையில் எழுந்தருளி இருக்கும் 108 சிவலிங்கங்களுக்கும் தமது கரங்களால் அபிசேகம் செய்வதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

- Advertisement -hnb-2021

இந்த அறிவிப்பை சிவபூமி அறக்கட்டளையின் தலைவர் கலாநிதி ஆறு. திருமுருகன் வெளியிட்டுள்ளார்.

இந்துக்களின் விரதங்களின் ஒன்றான மகா சிவராத்திரி நாளை ஆகும்.

அதனால் விரதமிருக்கும் சிவனடியவர்கள் தமது கரங்களால் 108 சிவலிங்கங்களுக்கு அபிசேகம் செய்து நேர்த்திக்கடனை நிறைவேற்றும் வசதியை நாவற்குழி சிவபூமி திருவாசக அரண்மனை நிர்வாகத்தினர் செய்துள்ளனர்.

- Advertisement -
- Advertisement -

Must Read

- Advertisement -

Related News

- Advertisement -
error: Alert: Content is protected !!