நித்யானந்தாவுக்கு நோபல் பரிசு! பரிந்துரைக்கிறார் நடிகை கஸ்தூரி!

நித்யானந்தா… இந்தப் பெயரை சாமன்யத்தில் தமிழர்கள் மறந்து விடக்கூடாது என்று நினைத்துத் தானோ என்னவோ சில வருடங்களுக்கு முன் தனியார் செய்தி ஊடகமொன்று அவரது அதிரி புதிரி சிற்றின்ப வீடியோ ஒன்றை அப்பட்டமாக அனைத்து வீடுகளின் வரவேற்பறை வரை கொண்டு சென்றது.
அந்த நேரத்தில் சாப்பிட்டுக் கொண்டோ, எதையாவது கொறித்துக் கொண்டோ அல்லது அசட்டையாக சோம்பல் முறித்துக் கொண்டோ அல்லது சிறு சண்டையிட்டுக் கொண்டோ தேமேவெனத் தொலைக்காட்சி பார்த்துக் கொண்டிருந்த அத்தனை நேயர்களும் அதிர்ச்சியின் உச்சத்தை அடைந்து உச்சி முடி நட்டுக் கொண்டு நிற்காத குறையாகப் பீதியில் உறைந்தார்கள்.

- Advertisement -

சிலருக்குப் பிறகு அது கிளர்ச்சியூட்டக் கூடிய வீடியோவாகவும் அமைந்திருக்கலாம். ஆனாலும் அத்தனை பெருமைக்கும் சொந்தக்காரரான நித்யானந்தா இன்னும் அடங்கியபாடில்லை. இவராகத்தான் இப்படியெல்லாம் வீடியோக்களை லீக் செய்கிறாரா? அல்லது பக்த சிகாமணிகள் இந்த அசகாய சுவாமிஜீயின் அற்புத லீலைகளைக் கசிய விடுகின்றனரா? என்று தெரியவில்லை.
சமீபத்தில் இணையத்தில் கசிய விடப்பட்டுள்ள இந்த வீடியோவைக் காணுங்கள். யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்!

‘நமோ நமோ நித்யானந்தாய்… நமோ நமோ நித்யானந்தாய்
ஓம் நமோ நித்யானந்தாய் சதாசிவாயா ஹோ
நித்யானந்த சதாசிவ மஹாதேவஸ்யே
என்ன உன் அழகு ஜடாமுடி மீசை!’

இந்த வரிகள் தான் இதில் ஹைலைட். நித்யானந்தாவைக் கடவுளின், ஏகாம்பரேஸ்வரரின் அவதாரம் என்று நினைத்து பெண் சிஷ்யைகள் பாடும் பாடல் இது. இதில் கூடுதலாக கணனி கிராபிக்ஸ் வேலையெல்லாம் செய்து மனிதர் சித்து விளையாட்டுகள் வேறு காட்டுகிறார்.
இந்த வீடியோவைக் குறித்து நடிகை கஸ்தூரி கூட தன்னுடைய சமீபத்திய ட்வீட்டில் குறிப்பிட்டு… இத்தனை வீரப் பராக்கிரமங்களை உள்ளடக்கிய நித்யானந்தா கூடுதலாக விலங்குகளையும் அற்புதமாகத் தமிழ் பேச வைக்கிறாராமே? இவருக்கெல்லாம் இலக்கியத்துக்கான நோபல் பரிசு தந்தால் என்ன? என்று பரிந்துரைத்திருக்கிறார்.

கஸ்தூரியின் ட்வீட்…

- Advertisement -
- Advertisement -

Must Read

- Advertisement -

Related News

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

error: Alert: Content is protected !!