நிறைவேற்று தர அரச அலுவலர்களின் மாதாந்த சம்பளத்தை உரிய திகதியிலிருந்து சில நாள்களுக்கு தாமதப்படுத்தும் யோசனைக்கு அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.
எவ்வாறாயினும், நிறைவேற்று அதிகாரமற்ற தரங்களின் சம்பளம் உரிய திகதியில் வழங்கப்படும் என்று அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
“நிறைவேற்று தர அரச அலுவலகர்களின் சம்பளம் இரண்டு முதல் மூன்று நாட்கள் அல்லது ஒரு வாரத்தில் வழங்கப்படலாம்” என்று அவர் கூறினார்.
“புதிய வருமான வரி சேகரிப்பு முறைகள் நடைமுறைக்கு வரும் வரை இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அடுத்த சில மாதங்களுக்கு நிதி வழங்குவதை திறைசேரி நிர்வகிக்க வேண்டும்.
முதல் தடவையாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது” என்றும் அமைச்சர் குணவர்தன தெரிவித்துள்ளார்.