அரச மற்றும் தனியார் வங்கிகளில் அடுத்த வாரம் முதல் நிலையான வைப்பு மற்றும் கடன் அட்டைகளுக்கான வட்டி விகிதங்கள் கணிசமாகக் குறைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த வியாழன் அன்று, இலங்கை மத்திய வங்கி வியக்கத்தக்க வகையில் கொள்கை வட்டி விகிதங்களை 250 அடிப்படை புள்ளிகளால் குறைத்தது.
இந்த அறிவிப்பைத் தொடர்ந்து, மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க, வர்த்தக வங்கிகளில் வைப்பு மற்றும் கடன் வட்டி விகிதங்கள் குறையும் என்று குறிப்பிட்டிருந்தார்.
கொள்கை விகித சரிசெய்தல் இல்லாவிட்டாலும், கடந்த ஆண்டிலிருந்து நாட்டின் பொருளாதார சூழலில் ஏற்பட்ட மாற்றத்தால் கடன் வட்டி விகிதம் குறைந்துள்ளது என்று அவர் சுட்டிக்காட்டினார்.
அதன்படி, நிலையான வைப்புத்தொகைக்கான வட்டி விகிதம் சுமார் 15 முதல் 16 சதவீதம் வரை குறைந்துள்ளது.
இதேவேளை, 30 வீதத்தை கடந்திருந்த கடன் அட்டைக்கான வட்டி வீதங்களும் மத்திய வங்கியின் தலையீட்டின் மூலம் குறைக்கப்பட உள்ளன.