வவுனியா மாவட்ட நீதிபதி தி.யோ.பிரபாகரனுக்கு மேல் நீதிமன்ற நீதிபதி நியமித்து ஜனாதிபதி இன்று கடிதம் வழங்கினார்.
நீதிச் சேவை ஆணைக்குழுவின் பரிந்துரையில் நான்கு பேருக்கு மேல் நீதிமன்ற நீதிபதி நியமனத்தை ஜனாதிபதி ரணில் விக்ரசிங்க வழங்கினார்.
நாளைமறுதினம் புதன்கிழமை நான்கு மேல் நீதிமன்ற நீதிபதிகளும் ஜனாதிபதி முன்னிலையில் உறுதியுரை எடுக்கவுள்ளனர்.
அவர்களில் வவுனியா மாவட்ட நீதிபதி தி.யோ பிரபாகரனுக்கும் மேல் நீதிமன்ற நீதிபதி நியமனம் வழங்கப்பட்டுள்ளது.
அவருக்கான மேல் நீதிமன்றை நீதிச் சேவை ஆணைக்குழு விரைவில் ஒதுக்கீடு செய்யும் என்பது குறிப்பிடத்தக்கது.
