நீதிமன்றப் பிணையில் வெளிவந்தவர்களே வன்முறைகளில் ஈடுபடுகின்றனர் – பொலிஸார் குற்றச்சாட்டு

மானிப்பாயில் இரண்டு வீடுகளுக்குள் புகுந்து வாளால் வெட்டியும் பெற்றோல் குண்டு வீசியும் அடாவடியில் ஈடுபட்ட கும்பலைச் சேர்ந்தவர்களில் பலர் நீதிமன்றப் பிணையில் விடுவிக்கப்பட்டநிலையில் பொலிஸாரால்  தேடப்படுபவர்கள் என தெரிவிக்கப்பட்டது.

ஆவாக் குழுவைச் சேர்ந்த வினோதன் (ஆவா), மனோ அசோக்,  மதன்ராஜ் உள்ளிட்டவர்களே இவ்வாறு பொலிஸாரால் தேடப்பட்டு வருபவர்கள்.

- Advertisement -

மானிப்பாய் லோட்டன் வீதியில் உள்ள வீடொன்றுக்குள் காலை 6.30 மணிக்கு புகுந்த 10 பேர் கொண்ட வாள்வெட்டுக் கும்பல், அங்கு பெற்றோல் குண்டு தாக்குதலை மேற்கொண்டதுடன், தந்தையையும் மகனையும் வாளால் வெட்டிக் காயப்படுத்தியது.

அதனையடுத்து மற்றொரு வீட்டுக்குள் புகுந்த கும்பல் அங்கு இளைஞர் ஒருவர் மீது வாளால் வெட்டிக் காயப்படுத்தியதுடன், சகோதரனைக் காப்பாற்ற முற்பட்ட சகோதரி மீதும் வாளால் வெட்டினர்.

இந்த அட்டூழியத்தை அரங்கேற்றியது ஆவா கும்பல் எனவும் வந்தவர்களைப் பெயர் குறிப்பிட்டு தாக்குதலுக்குள்ளானவர்கள் வாக்குமூலமளித்திருந்தனர்.

“தாக்குதலில் ஈடுப்பட்டவர்களில் பலர் யாழ்ப்பாணம், மானிப்பாய் மற்றும் சுன்னாகம் பொலிஸாரால் தேடப்படுபவர்கள். அவர்களுக்கு எதிராக பல வழக்குகள் உள்ளன.

நீதிமன்றின் பிணையில் வெளி வந்தவர்களே இவ்வாறு பல தாக்குதல்களில் ஈடுபடுகின்றனர்” என்று பொலிஸ் தகவல்கள் தெரிவித்தன.

வாள்வெட்டுக் கும்பல்களைச் சேர்ந்தோருக்கு சார்பாக நீதிமன்றில் முன்னிலையாகும் மூத்த சட்டதரணிகள், மேற்குறிப்பிட்ட நபர்கள் ஒழுங்கமுடையவர்கள் என்று தெரிவித்து பிணையில் எடுத்துவிடுவார்கள்.

ஆனால் பிணையில் வெளியே வந்து அதே நபர்கள் அட்டூழியத்தில் ஈடுபட்டால், நீதிமன்றில் முற்படுத்துவார்களா?

ஆகவே வாள்வெட்டு கும்பல்களும் வன்முறையாளர்களும்  தொடர்ந்து நீடிப்பதே  முன்னணி – மூத்த சட்டத்தரணிகள் சிலருக்கு அவசியமாகின்றது.

 

- Advertisement -
- Advertisement -

Must Read

- Advertisement -

Related News

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

error: Alert: Content is protected !!