நெகிழ்வான அலுவலகக் கடமை நேரத்தை நடைமுறைப்படுத்த அரசு கவனம்

அலுவலக கடமைகளுக்காக நிலையான கடமை நேரத்திற்கு பதிலாக நெகிழ்வான (Flexible) கடமை நேரத்தை தீர்மானிப்பது தொடர்பிலான நடைமுறைக்குக் கொண்டுவர அரசு கவனம் செலுத்தியுள்ளது.

நேற்யை தினம் இவ்வாண்டுக்கான பாடசாலை முதலாம் தவணை ஆரம்பமானதைத் தொடர்ந்து பெற்றோர் தமது பிள்ளைகளை பாடசாலைக்கு அனுப்புவதற்கு ஆர்வம் கொண்டுள்ளனர்.

தற்போதைய கோரோனா தொற்று நிலமைக்கு மத்தியில் தமக்குரிய வானகங்களில் பிள்ளைகளை பாடசாலைக்கு அனுப்புவதில் பெற்றோர் கவனம் செலுத்தியுள்னர்.

இதனால் வீதிகளில் வாகன நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதற்கு மாற்றாக பாடசாலை ஆரம்பிக்கும் நேரம் அலுவலகங்களில் கடமைகளை ஆரம்பிப்பதற்கான நேரங்களில் மாற்றங்களை மேற்கொண்டால் இந்த வீதி நெருக்கடியை தடுக்க கூடியதாக இருக்கும் என்று ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்கு அமைச்சரவை இணைப்பேச்சாளரும் அமைச்சருமான உதய கம்மன்பிலஅமைச்சர் பதிலளிக்கையிலேயே இந்த விடயத்தை கூறினார்.

“பாடசாலைகள் காலை 7.30 மணிக்கு ஆரம்பமாகின்றது. அதற்காக அலுவலகங்களில் 8 மணிக்கு கடமை நேரம் ஆரம்பமாகின்றது. வர்த்தக நிலையங்கள் 9 மணி அல்லது 9.30 மணிக்கு தமது கடமைகளை ஆரம்பிக்கின்றன.

இருப்பினும், தற்போதைய சூழ்நிலையில் இந்த நேரமாற்றம் தொடர்பில் அரசு கவனம் செலுத்தியுள்ளது. வாரத்தில் 40 மணித்தியாலய கடமை நேரத்தை முழுமைபடுத்துவதில் தொழில்நுட்ப உதவிகளை பயன்படுத்துவது குறித்தும் அரசு கவனம் செலுத்தியுள்ளது. வெளிநாடுகளில் இவ்வாறான நடைமுறைகள் இருக்கின்றன” என்றும் அமைச்சர் உதய கம்பன்பில தெரிவித்தார்.

- Advertisement -
- Advertisement -

Must Read

யாழ்ப்பாணத்தில் தங்கத்தின் விலை புதிய உச்சத்தில்

யாழ்ப்பாணத்தில் தங்கத்தின் விலை இன்று வியாழக்கிழமை புதிய உச்சத்தை எட்டியுள்ளது. அதன்படி 24 கரட் தூய தங்கத்தின் விலை ஒரு லட்சத்து 10 ஆயிரமாக உயர்வடைந்துள்ளது....
- Advertisement -

நாட்டில் கோரோனா தொற்றால் பாதித்தோர் எண்ணிக்கை 55,000ஐத் தாண்டியது

நாட்டில் கோவிட் -19 நோயால்மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளார் என்று அரச தகவல் திணைக்களம் இன்று புதன்கிழமை அறிவித்துள்ளது. இதன்மூலம் நாட்டில் கோவிட் -19 நோயால் உயிரிழந்தோர்...

அமெரிக்காவின் 46ஆவது ஜனாதிபதியாக ஜோ பைடன் பதவியேற்பு – நேரலையைப் பார்வையிடலாம்

அமெரிக்காவின் ஜனாதிபதியாக ஜோ பைடன் மற்றும் துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸ் பதவியேற்பு நிகழ்வு தற்போது இடம்பெற்று வருகிறது. அதன் நேரலையை பார்வையிடலாம்;

மன்னார் வைத்தியசாலையில் 2 தாதியர்கள், 2 ஊழியர்களுக்கு கோரோனா தொற்று; பொலிஸார் மூவரும் பாதிப்பு

மன்னார் மாவட்டத்தில் 18 பேருக்கு கோரோனா வைரஸ் தொற்று உள்ளமை இன்று புதன்கிழமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அவர்களில் மன்னார் வைத்தியசாலையைச் சேர்ந்த 2 தாதியர்களும் 2 ஊழியர்களும் அடங்குகின்றனர் என்று வடமாகாண...

Related News

மன்னாரில் கோவிட் -19 நோயால் உயிரிழந்தவரின் ஜனாஸா நாளை வவுனியாவில் தகனம்

மன்னார் பொது வைத்தியசாலை தனிமைப்படுத்தல் விடுதியில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் கோவிட் -19 நோயால் உயிரிழந்தவரின் சடலத்தை அரச செலவில் வவுனியா நகர சபையால் பராமரிக்கப்படும் மின் தகன...
- Advertisement -
error: Alert: Content is protected !!