Sunday, May 28, 2023
Homeஉள்ளூர் செய்திகள்நெடுந்தீவு கொலை வெறியாட்டம்; மூதாட்டியும் உயிரிழந்தார்

நெடுந்தீவு கொலை வெறியாட்டம்; மூதாட்டியும் உயிரிழந்தார்

நெடுந்தீவில் நகைகளை அபகரிக்கும் நோக்குடன் கொடூரமாக நடத்தப்பட்ட தாக்குதலில் படுகாயமடைந்த 6ஆவது நபரான மூதாட்டி உயிரிழந்தார்.

இந்த தகவலை யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனை நிர்வாகம் உறுதி செய்தது.

100 வயது மூதாட்டியான பூரணம் இன்று மாலை உயிரிழந்தார். அவரது இருதயம் செயலிழந்ததனால் உயிரிழந்தார் என்று மருத்துவ அறிக்கையிடப்பட்டுள்ளது.

கடந்த சனிக்கிழமை அதிகாலை ஒரே வீட்டில் வசிக்கும் 6 பேர் மீது நடத்தப்பட்ட கொடூரத் தாக்குதலில் 3 பெண்களும் 2 ஆண்களும் உயிரிழந்தனர். 100 வயதான மூதாட்டி படுகாயங்களுடன் மீட்கப்பட்டு யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

இந்த கொலைவெறியாட்டை அரங்கேற்றி நகைகளுடன் தப்பித்தவர் புங்குடுதீவில் வைத்து அன்றிரவே கைது செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

RELATED ARTICLES
- Advertisment -

Most Popular